மும்பை மெட்ரோவில் மேலாளர், உதவியாளர் பணியிடங்கள்: ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம்
மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Assistant Manager, System Analyst, Draftsman மற்றும் Assistant (IT) உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 26, 2026.
மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (MMRCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு மேலாளர் மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் அனுபவமும் கொண்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Assistant Manager (IT)
இந்தப் பிரிவில் ஒரு காலியிடம் (SC) அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி: தகவல் தொழில்நுட்பம் (IT) தொடர்பான பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
System Analyst / Junior Engineer – I
இந்தப் பணிக்கான ஒரு காலியிடம் (UR) உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.40,320 முதல் ரூ.77,540 வரை ஊதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி: கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவில் பி.இ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Draftsman (Civil / Architectural)
இந்தப் பிரிவில் 2 காலியிடங்கள் (UR) உள்ளன. மாதம் ரூ.35,280 முதல் ரூ.67,920 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி: சிவில் பொறியியல் பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Assistant (IT)
இந்தப் பிரிவில் ஒரு காலியிடம் (UR) உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.34,020 முதல் ரூ.64,310 வரை ஊதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி: Computer Science Engineering, Information Technology அல்லது Electronics & Telecommunication பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான corporate.mmrcl.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (MMRCL)
- பணிகள்: Assistant Manager (IT), System Analyst / Junior Engineer-I, Draftsman (Civil/Architectural), Assistant (IT)
- மொத்த காலியிடங்கள்: 5
- தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
- கடைசி தேதி: 26.06.2026
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்றவர்களுக்கு மும்பை மெட்ரோ நிறுவனத்தில் பணிபுரிய இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியானவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Prasanth Subramani