கோவை ஜி.டி மேம்பாலத்தில் 5 நாள் இரவுநேர போக்குவரத்து தடை
கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜி.டி மேம்பாலத்தில் மே 14 முதல் 18 வரை இரவு நேர போக்குவரத்து தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை நகரில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜி.டி மேம்பாலத்தில் 5 நாட்களுக்கு இரவுநேர போக்குவரத்து தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (மே 14) முதல் மே 18-ஆம் தேதி வரை தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அந்த நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மாற்று சாலைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Prasanth Subramani