கோவையில் புதிய மையத்தை திறக்கும் FORD... 800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் FBS விரிவாக்கம்!

உலகின் முன்னணி கார் உற்பத்தியாளரான FORD MOTOR நிறுவனத்தின் FORD BUSINESS SOLUTIONS (FBS), கோவையில் தனது மூன்றாவது இந்திய தொழில்நுட்ப மற்றும் வணிக சேவை மையத்தை 800 இருக்கைகள் கொண்ட வசதியுடன் விரைவில் தொடங்க உள்ளது.

கோவையில் புதிய மையத்தை திறக்கும் FORD... 800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் FBS விரிவாக்கம்!

உலகின் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான FORD MOTOR நிறுவனத்தின் FORD BUSINESS SOLUTIONS (FBS), கோவையில் தனது மூன்றாவது இந்திய தொழில்நுட்ப மற்றும் வணிக சேவை மையத்தை விரைவில் தொடங்க உள்ளது.

கோவையில் உள்ள SVB TECH PARK வளாகத்தில் 82,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன மையத்தில் 800 இருக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் கணக்கியல், நிதி சேவைகள் (FORD CREDIT), தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு வணிக ஆதரவு சேவைகளுக்கான பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இந்த புதிய மையம், சென்னையில் செயல்பட்டு வரும் FORD BUSINESS SOLUTIONS மையத்திற்கு மாற்று செயல்பாட்டு (Business Continuity) மையமாகவும் செயல்படும். இதன் மூலம் நிறுவனத்தின் சேவைகள் இடையூறு இல்லாமல் தொடர்ந்து வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

கோவையில் திறமையான தகவல் தொழில்நுட்ப மனித வளம், வளர்ந்து வரும் வணிக மற்றும் ஆட்டோமொபைல் சூழல், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஆகியவை இந்த விரிவாக்கத்திற்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய மையம் கோவை நகரின் தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக சேவைத் துறைக்கு மேலும் வலுசேர்ப்பதுடன், நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.