கோவையில் ஜூலை 9 முதல் AGRI INTEX 2026... 1,000-க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன் பிரம்மாண்ட விவசாய கண்காட்சி!

கோவையில் ஜூலை 9 முதல் 13 வரை நடைபெறும் AGRI INTEX 2026 கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 1,000-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் மற்றும் AI, ட்ரோன், நவீன விவசாய தொழில்நுட்பங்கள் இடம்பெறவுள்ளன.

கோவையில் ஜூலை 9 முதல் AGRI INTEX 2026... 1,000-க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன் பிரம்மாண்ட விவசாய கண்காட்சி!

கோவையில் ஜூலை 9 முதல் 13 வரை நடைபெறவுள்ள AGRI INTEX 2026, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி விவசாய வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றாக நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 1,000-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் மற்றும் 400-க்கும் அதிகமான தயாரிப்பு பிரிவுகள் இடம்பெற உள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் பங்கேற்று, விவசாயத் துறைக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI), ட்ரோன் தொழில்நுட்பம், நவீன விவசாய இயந்திரங்கள், AGRI-TECH தீர்வுகள், உணவு பதப்படுத்தல், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

விவசாயிகள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வேளாண் துறையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் புதிய தொழில்நுட்பங்களை நேரடியாக அறிந்து கொள்ளவும், தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் இந்த AGRI INTEX 2026 சிறந்த தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.