ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்த உள்ளார். துணைக் கேப்டனாக தேவ்தத் படிக்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா ஏ அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்த உள்ளார்.

இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற உள்ளன.

இந்தத் தொடரில் தேவ்தத் படிக்கல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திறமையான பல இளம் வீரர்கள் இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வீரர்கள் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு, தங்களது திறமையை வெளிப்படுத்துவதுடன், இந்திய சீனியர் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பையும் எதிர்நோக்குகின்றனர்.

வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இந்தியா ஏ அணி களமிறங்க உள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியின் செயல்பாடு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.