தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: ஒரே நாளில் 71 பேருக்கு தொற்று
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 71 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் மொத்த பாதிப்பு 17,348 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 71 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 17,348 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று 11 பேருக்கு புதிதாக டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழ்நாட்டில் இதுவரை 4,653 பேருக்கு உண்ணிக்காய்ச்சல் எனப்படும் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதுடன், நோய் பரவல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
Dharshini