IPL 2027: ஹார்திக் பாண்டியா – அர்ஷ்தீப் சிங் அதிரடி பரிமாற்றம் நிறைவு! BCCI ஒப்புதல் வழங்கியது
IPL 2027 தொடருக்கு முன்னதாக ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாறும் வீரர்கள் பரிமாற்றத்திற்கு BCCI ஒப்புதல் வழங்கியுள்ளது.
IPL 2027 தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹார்திக் பாண்டியா – அர்ஷ்தீப் சிங் வீரர்கள் பரிமாற்றம் நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாறுகின்றனர். இரு அணிகளுக்கும் இடையிலான இந்த நேரடி வீரர் பரிமாற்றத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI-யின் முறையான ஒப்புதல் கிடைத்துள்ளதாக கிரிக்கெட் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பரிமாற்றத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடிய அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கிடைத்துள்ளார். மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்தியாவின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் வருகிறார். இதனால் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து அர்ஷ்தீப் செயல்படுவது மும்பை அணியின் பந்துவீச்சுப் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பரிமாற்றத்திலும் இரு வீரர்களின் சம்பளத்தில் மாற்றம் இல்லை என Cricbuzz செய்தி தெரிவித்துள்ளது. அதன்படி, ஹார்திக் பாண்டியாவின் சம்பளம் ₹16.35 கோடியாகவும், அர்ஷ்தீப் சிங்கின் சம்பளம் ₹18 கோடியாகவும் தொடரும். IPL 2027 தொடருக்கு முன்னதாக இரு அணிகளின் பலத்திலும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பரிமாற்றம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Dharshini