CSK-வின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜஹீர் கான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2027 சீசனில் அவர் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2027 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஜஹீர் கான் ஏற்கிறார். இதன் மூலம் 2009 முதல் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் நீண்டகால பயிற்சிப் பயணம் முடிவுக்கு வருகிறது.
ஜஹீர் கான் இந்திய அணிக்காக 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்காற்றிய அவர், அந்தத் தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாகப் பொறுப்புகளிலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வழிகாட்டியாகவும் ஜஹீர் கான் பணியாற்றியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை வகிக்கும் முதல் இந்தியர் என்ற சிறப்பையும் ஜஹீர் கான் பெறுகிறார். ஐபிஎல் 2027 சீசனில் அவரது தலைமையில் சிஎஸ்கே புதிய பயணத்தை தொடங்க உள்ளது.
Dharshini