'ஜன நாயகன்' ஜூலை 23 முதல் உலகம் முழுவதும் ரிலீஸ்... ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகிறார்கள்!
விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் 2026 ஜூலை 23 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான 'ஜன நாயகன்' திரைப்படம், 2026 ஜூலை 23 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதியை அறிவித்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
எச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பு தணிக்கை தொடர்பான சிக்கல்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் காரணமாக ரிலீஸ் தாமதமான நிலையில், அனைத்து தடைகளையும் கடந்து தற்போது உலகம் முழுவதும் வெளியாக தயாராகியுள்ளது.
விஜயின் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படைப்பாக மட்டுமல்லாமல், அவரது அரசியல் பயணத்திற்கு முன்பாக வெளியாகும் கடைசி திரைப்படம் என்ற காரணத்தாலும் 'ஜன நாயகன்' ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கொண்டாட ரசிகர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். படம் வெளியாகும் நாளை முன்னிட்டு பல்வேறு ரசிகர் மன்றங்கள் சிறப்பு கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
Prasanth Subramani