SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 45 நிமிடங்களுக்கு UPI சேவை நிறுத்தம்

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 4-ம் தேதி நள்ளிரவு 12:15 மணி முதல் 1:00 மணி வரை SBI UPI சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன.

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 45 நிமிடங்களுக்கு UPI சேவை நிறுத்தம்

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்டமிடப்பட்ட தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக SBI-யின் UPI சேவைகள் 45 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன.

அதன்படி, செப்டம்பர் 4-ம் தேதி நள்ளிரவு 12:15 மணி முதல் 1:00 மணி வரை SBI UPI சேவைகளைப் பயன்படுத்த முடியாது என வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நேரத்தில் UPI மூலம் பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல் உள்ளிட்ட சேவைகளில் தற்காலிக இடையூறு ஏற்படலாம். எனவே, அவசரமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டிய வாடிக்கையாளர்கள், தேவையான பரிவர்த்தனைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

SBI வாடிக்கையாளர்கள் இந்த தற்காலிக சேவை இடையூட்டை கருத்தில் கொண்டு தங்களது பணப்பரிவர்த்தனைகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.