UPI-யில் புதிய கட்டண விதி: யாருக்கு 0.4% MDR பொருந்தும்?
அக்டோபர் 15, 2026 முதல் ₹2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் அமலாகிறது. இந்தக் கட்டணம் யாருக்கு பொருந்தும், வாடிக்கையாளர்களுக்கு என்ன மாற்றம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
UPI பரிவர்த்தனைகளில் புதிய கட்டண விதி அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, ₹2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத Merchant Discount Rate எனப்படும் MDR கட்டணம் பொருந்தும்.
இந்த MDR கட்டணம் வாடிக்கையாளர்களிடம் விதிக்கப்படும் வரி அல்ல. இது வணிகர் சார்ந்த பணப்பரிவர்த்தனை அமைப்பிற்குள் வசூலிக்கப்படும் கட்டணமாகும். எனவே, வாடிக்கையாளர்களிடம் MDR கட்டணத்தை தனியாக வசூலிக்கக் கூடாது.
₹2,000 வரையிலான வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் பொருந்தாது. அதேபோல், நபர் முதல் நபருக்கான UPI பணப்பரிமாற்றங்களும் தொடர்ந்து இலவசமாக இருக்கும்.
₹75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசின் தகவலின்படி, சுமார் 96 சதவீத வணிக UPI பரிவர்த்தனைகள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படாது. எனவே, பொதுமக்கள் வழக்கமாக மேற்கொள்ளும் பெரும்பாலான UPI பரிவர்த்தனைகளில் நேரடி கூடுதல் கட்டணம் ஏற்படாது.
Prasanth Subramani