முதல் பேட்டிங் வாய்ப்பிலேயே ஆட்டநாயகன்.. கவனம் ஈர்த்த மணீஷ் பாண்டே!
இந்த சீசனில் முதல்முறையாக பேட்டிங் வாய்ப்பு பெற்ற கேகேஆர் வீரர் மணீஷ் பாண்டே, மும்பைக்கு எதிராக 45 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்று ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அனுபவ வீரர் மணீஷ் பாண்டே, இந்த ஐபிஎல் சீசனில் முதல்முறையாக பேட்டிங் வாய்ப்பு பெற்று அதிலேயே ஆட்டநாயகன் விருது வென்றது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎல் தொடங்கிய காலத்திலிருந்தே விளையாடி வரும் 36 வயதான மணீஷ் பாண்டே, பல சீசன்களாகவே தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரராக இருந்து வருகிறார்.
நேற்று ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 147/8 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 148/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மணீஷ் பாண்டே 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். குறிப்பாக, இந்த சீசனில் அவர் விளையாடிய நான்காவது போட்டியில்தான் முதல்முறையாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் தொடர்ந்து பயிற்சியிலும் உழைப்பிலும் கவனம் செலுத்திய மணீஷ் பாண்டேவின் பொறுமை மற்றும் தன்னம்பிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
கேகேஆர் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, “போட்டிகளில் விளையாடாதபோதும் மணீஷ் பாண்டேவின் உழைப்பும், அணுகுமுறையும் மிகவும் சிறப்பாக இருந்தது” என்று பாராட்டினார்.
நீண்டநாளாக காத்திருந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி ஆட்டநாயகன் விருது வென்ற மணீஷ் பாண்டே, மீண்டும் தனது அனுபவத்தை நிரூபித்துள்ளார்.
Prasanth Subramani