1600 நாட்கள் ஆதிக்கம் முடிவு! இந்தியாவை பின்னுக்குத் தள்ளி டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து

இந்தியாவை 4-0 என்ற கணக்கில் டி20 தொடரில் வீழ்த்திய இங்கிலாந்து, ஐசிசி டி20 அணிகள் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. 1600 நாட்களுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்த இந்தியா தற்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

1600 நாட்கள் ஆதிக்கம் முடிவு! இந்தியாவை பின்னுக்குத் தள்ளி டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து

ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில், இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 1600 நாட்களுக்கும் மேலாக டி20 தரவரிசையில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் பயணத்திற்கு இங்கிலாந்து தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. சௌத்தாம்டனில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றதுடன், முழு தொடரையும் 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி அபார சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் மூலம், ஐசிசி டி20 அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதேவேளையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு சரிந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திய அணி டி20 தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியது. அதன் பின்னர் 1600 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்திருந்த இந்திய அணியின் நீண்டகால ஆதிக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கு முன்பாகவே, டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பதே எங்கள் இலக்கு என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் தெரிவித்திருந்தார். அவர் கூறிய இலக்கை இங்கிலாந்து அணி வெற்றிகரமாக நிறைவேற்றி, உலகின் நம்பர் 1 டி20 அணியாக மீண்டும் உருவெடுத்துள்ளது.