காளப்பட்டி வழியாக ஊட்டிக்கு புதிய 4 வழிச்சாலை... ₹27 கோடி திட்டம்!

கோவை சித்திரா சந்திப்பில் இருந்து காளப்பட்டி வழியாக மேட்டுப்பாளையம் வரை 8.6 கி.மீ. நீளத்தில் புதிய 4 வழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. ₹27 கோடி மதிப்பிலான இந்த திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைத்து ஊட்டி செல்லும் பயணத்தை எளிதாக்கும்.

காளப்பட்டி வழியாக ஊட்டிக்கு புதிய 4 வழிச்சாலை... ₹27 கோடி திட்டம்!

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் நிலவும் கனரக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், வனவிலங்குகளின் இயற்கை வலசைப் பாதையை பாதுகாப்பதற்கும் முக்கிய நடவடிக்கையாக புதிய 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், அவிநாசி சாலையில் உள்ள சித்திரா சந்திப்பில் இருந்து காளப்பட்டி வழியாக மேட்டுப்பாளையம் வரை 8.6 கிலோமீட்டர் நீளத்தில் புதிய 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த முக்கிய உள்கட்டமைப்பு திட்டத்திற்காக ₹27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் நிறைவடைந்த பிறகு, கனரக வாகனங்கள் கோவில்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டிக்கு விரைவாகவும், போக்குவரத்து நெரிசல் இன்றியும் செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த புதிய சாலை மூலம் கோவை–மேட்டுப்பாளையம் பிரதான சாலையின் போக்குவரத்து சுமை குறைவதுடன், வனவிலங்குகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இடையேயான சாலைப் போக்குவரத்து மேலும் மேம்படும்.