10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண்!

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண் சரிவால் பாதிக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல்தளத்தில் 10 நாட்களாக சிக்கியிருந்த சந்திகா ஷ்ரேஷ்டா உயிருடன் மீட்கப்பட்டார்.

10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண்!

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் சிக்கியிருந்த பெண் ஒருவர் 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

நுவாகோட் மாவட்டத்தின் பெட்ராவதி பகுதியில் வெள்ளம் மற்றும் மண் சரிவால் பாதிக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல்தளத்தில் சந்திகா ஷ்ரேஷ்டா சிக்கியிருந்தார். அவரை நேபாள ஆயுதக் காவல் படை (APF) மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட சந்திகா ஷ்ரேஷ்டாவை ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேபாள வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும், பலர் காணாமல் போயுள்ள நிலையிலும், 10 நாட்களுக்குப் பிறகு பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது மீட்புப் பணிகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.