TVK–காங்கிரஸ் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு!
2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக TVK மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல். செப்டம்பர் 9-ம் தேதி TVK கூட்டணி மற்றும் நட்புக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.
2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் காங்கிரஸ் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TVK-வின் சில நிர்வாகிகள், அக்கட்சித் தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, 2029-ம் ஆண்டு தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, செப்டம்பர் 9-ம் தேதி TVK சார்பில் கூட்டணி மற்றும் நட்புக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியை முறைப்படுத்துவது, கூட்டணிக்கு பெயர் சூட்டுவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பாக TVK–காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில், செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எனினும், TVK–காங்கிரஸ் கூட்டணி உடைந்துவிட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Dharshini