முதல்வர் விஜய் அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு.. யாருக்கு எந்த துறை?

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல், உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை முதல்வர் விஜய் தக்கவைத்துள்ளார்.

முதல்வர் விஜய் அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு.. யாருக்கு எந்த துறை?

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசில் பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கு இன்று (மே 16) துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றது. முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றிருந்தனர். ஆனால், பதவியேற்று 6 நாட்கள் கடந்தும் துறைகள் ஒதுக்கப்படாததால் எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, அமைச்சர்களுக்கான துறைகள் பட்டியல் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வரின் தனிச் செயலர் செந்தில் குமார் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை சந்தித்தார்.

இதன் பின்னர் அமைச்சர்களுக்கான துறைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

முதல்வர் சி. ஜோசப் விஜய் தனது வசம் காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட முக்கிய துறைகளை வைத்துள்ளார்.

அமைச்சர்களுக்கான துறைகள் விவரம் வருமாறு:

  • என். ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை, பஞ்சாயத்து மற்றும் பாசனத் திட்டங்கள்
  • ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விளையாட்டு மேம்பாடு
  • கே.ஜி. அருண்ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
  • ராஜ்மோகன் – பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை
  • டி.கே. பிரபு – கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை
  • எஸ். கீர்த்தனா – தொழில் துறை மற்றும் முதலீடு ஊக்குவிப்பு துறை
  • கே.ஏ. செங்கோட்டையன் – நிதி மற்றும் ஓய்வூதியத் துறை
  • பி. வெங்கடரமணன் – உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை
  • ஆர். நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் சட்டத் துறை

புதிய அமைச்சரவை துறைகள் ஒதுக்கீடு தமிழக அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.