கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் திருவிழா! செப்டம்பர் 10 முதல் கோலாகலம்

கோவை கொடிசியா மைதானத்தில் செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 20 வரை பிரம்மாண்ட மலர் திருவிழா நடைபெற உள்ளது. மலர் அலங்காரங்கள், தோட்டக் கலை, உணவுத் திருவிழா மற்றும் ஷாப்பிங் ஸ்டால்கள் இடம்பெற உள்ளன.

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் திருவிழா! செப்டம்பர் 10 முதல் கோலாகலம்

கோவை கொடிசியா மைதானத்தில் செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 20 வரை பிரம்மாண்ட மலர் திருவிழா நடைபெற உள்ளது.

இந்த மலர் திருவிழாவில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், கண்கவர் மலர் அலங்காரங்கள், மலர் வடிவமைப்புகள் மற்றும் அழகிய தோட்டக் கலைப் படைப்புகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட உள்ளன.

மலர்களின் அழகை ரசிப்பதுடன், பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் உணவுத் திருவிழா, விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஷாப்பிங் ஸ்டால்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம்பெற உள்ளன.

குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புபவர்கள் மலர்களின் அழகை ரசிப்பதோடு, இயற்கை மற்றும் தோட்டக்கலை குறித்த அனுபவத்தையும் பெறும் வகையில் இந்த மலர் திருவிழா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 20 வரை நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட மலர் திருவிழா, கோவை மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சிறப்பான பொழுதுபோக்கு அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.