ரஷ்யா மீண்டும் தாக்குதல் தீவிரம் – அமெரிக்க பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் உக்ரைனில் பதற்றம்!
அமெரிக்க பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க சிறப்பு தூதர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சென்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று நாட்கள் நீடித்த தாக்குதல் இடைவேளை முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கீவ் நகரில் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ரஷ்யா–உக்ரைன்–அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் சூழலிலேயே ரஷ்யாவின் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்திருப்பது சர்வதேச அளவில் கவலையையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் தாக்குதல்கள் தொடர்வது உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
Dharshini