MESSI-யே நினைத்திருக்க மாட்டார்... கையில் இருந்த 6 மாத குழந்தை இன்று உலகக்கோப்பை இறுதியில் எதிரணி!
19 ஆண்டுகளுக்கு முன்பு லியோனல் மெஸ்ஸியின் கையில் இருந்த 6 மாத குழந்தையான லமின் யமால், இன்று FIFA உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணிக்காக மெஸ்ஸிக்கு எதிராக களமிறங்க உள்ளார்.
கால்பந்து உலகையே ஆச்சரியப்பட வைத்த ஒரு புகைப்படம் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
19 ஆண்டுகளுக்கு முன்பு, லியோனல் மெஸ்ஸி தனது இளம் வயதில் நடைபெற்ற ஒரு புகைப்பட நிகழ்ச்சியில் 6 மாத குழந்தையை கையில் தூக்கி வைத்திருந்தார். அந்த குழந்தை இன்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமாக உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ள லமின் யமால்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக, இன்று FIFA உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில் அதே யமால், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு எதிராக ஸ்பெயின் அணிக்காக களமிறங்க உள்ளார்.
ஒரு புகைப்படத்தில் தொடங்கிய இந்த அழகான தருணம், இன்று உலக கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் வரலாற்று மோதலாக மாறியுள்ளது. மெஸ்ஸியின் கையில் தவழ்ந்த குழந்தை, தற்போது உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவருக்கு எதிராக நிற்கும் வீரராக உருவெடுத்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கால்பந்து ரசிகர்கள் பலரும், "காலம் எப்படி மாறுகிறது என்பதற்கான மிக அழகான உதாரணம் இதுதான்" என இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்பதைக் கடந்தும், மெஸ்ஸி மற்றும் யமால் இடையேயான இந்த தலைமுறை மோதல் கால்பந்து வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Prasanth Subramani