கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்.. கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு!
கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து BIS அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஐஎஸ்ஐ தரச்சான்று இல்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் உள்ள சில கடைகளில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் BIS அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, விதிமுறைகளை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஐ தரச்சான்று இல்லாத ஹெல்மெட்டுகள் விபத்து நேரங்களில் போதிய பாதுகாப்பு வழங்காது என்பதால், பொதுமக்கள் தரமான ஹெல்மெட்டுகளை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Prasanth Subramani