அஜித்தின் ‘Gladiators’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

நடிகர் அஜித் குமாரின் கார் பந்தய வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘Gladiators: In Pursuit of Challenges’ ஆவணப்படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

அஜித்தின் ‘Gladiators’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

நடிகர் அஜித் குமாரின் கார் பந்தய வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘Gladiators: In Pursuit of Challenges’ ஆவணப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சிறப்புக் காட்சிகளில் ரசிகர்கள் திரண்ட நிலையில், திரையில் அஜித் தோன்றியபோது உற்சாகமாக கைத்தட்டி, ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

அஜித்தின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வம், ரேசிங் அனுபவங்கள் மற்றும் பந்தய உலகில் அவர் சந்தித்த சவால்களை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.

மேலும், அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளதால், அவரது பந்தயப் பயணத்தின் தனிப்பட்ட பக்கத்தையும் ‘Gladiators’ ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது.