இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு... 50,000 அடி உயரத்திற்கு எழுந்த சாம்பல்!
இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலை வெடித்ததில் சாம்பல் மேகம் 50,000 அடி உயரம் வரை பரவியதால் பல விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 2,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் சுமார் 2.7 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட சாம்பல் மேகம் 50,000 அடி உயரம் வரை பரவியது.
எரிமலைச் சாம்பல் காரணமாக இந்தோனேசியாவின் பல விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 2,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 2.7 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
எரிமலைச் சாம்பல் மேகம் அதிக உயரம் வரை பரவியுள்ளதால், விமானப் போக்குவரத்தில் தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
Dharshini