கட்டணம் உயர்கிறதா? தனியார் பேருந்துகளுக்கு செப்.17-ல் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு கோரிக்கை குறித்து செப்டம்பர் 17-ம் தேதி உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

கட்டணம் உயர்கிறதா? தனியார் பேருந்துகளுக்கு செப்.17-ல் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

கட்டண உயர்வு கோரிக்கை குறித்து வரும் செப்டம்பர் 17-ம் தேதி உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் உள்ளிட்ட இயக்கச் செலவுகள் அதிகரித்துள்ளதை காரணமாகக் காட்டி, தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

எனினும், இதுவரை தனியார் பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும் உயர்மட்டக் குழு ஆலோசனைக்குப் பிறகே, கட்டண உயர்வு தொடர்பான அடுத்தகட்ட முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தனியார் பேருந்துகளின் கட்டணம் உயருமா என்பது குறித்து பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.