பெண்களுக்காக கோவையில் புதிய ‘பிங்க் பூத்’! பாதுகாப்பை வலுப்படுத்த புதிய திட்டம்
கோவையில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ‘சிங்கப்பெண் பிங்க் பூத்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேரடி புகார், QR மூலம் டிஜிட்டல் புகார் மற்றும் SOS வசதிகள் இடம்பெற்றுள்ளன.
கோயம்புத்தூர் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘சிங்கப்பெண் பிங்க் பூத்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிங்க் பூத் மூலம் பெண்கள் பெண் காவலர்களிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். மேலும், QR குறியீடு மூலம் டிஜிட்டல் முறையிலும் புகார் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவசரநிலைகளில் SOS வசதி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ரோந்து குழுக்களை உடனடியாக தொடர்புகொள்ளும் வகையிலும் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கோவையில் ஹோப் கல்லூரி சந்திப்பு மற்றும் ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் பிங்க் பூத் செயல்பட உள்ளது.
அச்சுறுத்தல், துன்புறுத்தல் அல்லது பின்தொடர்தல் போன்ற பிரச்சினைகளை பெண்கள் எதிர்கொண்டால், குற்றம் நடைபெறும் வரை காத்திருக்காமல் இந்த வசதியை பயன்படுத்தி உடனடியாக உதவி பெறலாம்.
அவசர உதவிக்காக பெண்கள் உதவி எண் 1091, காவல் கட்டுப்பாட்டு அறை 100 அல்லது தமிழ்நாடு பெண்கள் உதவி எண் 181 ஆகியவற்றை தொடர்புகொள்ளலாம்.
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி, கோவையில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prasanth Subramani