கோவை சேஞ்ச்மேக்கர்ஸ் ரோட்டராக்ட் கிளப்பின் 2-வது தலைவராக நவீன் பிரசாத் பொறுப்பேற்பு!

கோவை சேஞ்ச்மேக்கர்ஸ் ரோட்டராக்ட் கிளப்பின் 2-வது தலைவராக நவீன் பிரசாத் பொறுப்பேற்றார். புதிய நிர்வாகக் குழு பதவியேற்புடன் ‘FEED THE NEEDY’ சமூக சேவைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவை சேஞ்ச்மேக்கர்ஸ் ரோட்டராக்ட் கிளப்பின் 2-வது தலைவராக நவீன் பிரசாத் பொறுப்பேற்பு!

கோவை சேஞ்ச்மேக்கர்ஸ் ரோட்டராக்ட் கிளப்பின் 2-வது தலைவராக Rtr. நவீன் பிரசாத் பொறுப்பேற்றார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள TAASI Hall-ல் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய நிர்வாகக் குழுவின் பதவியேற்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ABWOA நிறுவனர் Lion Dr. Radha Bellan தலைமை விருந்தினராகவும், Rtr. Vijay Vignesh சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர்.

கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த புதிய கிளப், குறுகிய காலத்திலேயே 97 சமூகத் திட்டங்களை செயல்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ‘CODE RED’ என்ற ரத்த தான விழிப்புணர்வு திட்டம் பாராட்டைப் பெற்றதுடன், 2026–27 ஆண்டிற்கான Best New Rotaract Club அங்கீகாரமும் கிளப்புக்கு கிடைத்துள்ளது.

புதிய தலைவராக பொறுப்பேற்ற நவீன் பிரசாத், அனைத்து உறுப்பினர்களையும் சமூக சேவை மற்றும் தலைமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, கிளப்பை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து 16 புதிய நிர்வாகப் பொறுப்பாளர்கள் பதவியேற்றனர். மேலும், கிளப்பின் புதிய சமூக சேவைத் திட்டமான ‘FEED THE NEEDY’ அறிமுகப்படுத்தப்பட்டது.

இளம் உறுப்பினர்களின் சமூகப் பணிகளை பாராட்டிய சிறப்பு விருந்தினர்கள், மேலும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு அதிக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுமாறு வாழ்த்தினர்.

சமூக சேவை மற்றும் இளைஞர் தலைமைத்துவத்தை முன்னெடுத்து வரும் கோவை சேஞ்ச்மேக்கர்ஸ் ரோட்டராக்ட் கிளப், புதிய நிர்வாகக் குழுவுடன் தொடர்ந்து பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.