அஜித்தின் ரேஸ்… விஜய்யின் ஸ்பெஷல் விசிட்?
Silverstone Circuit-ல் நடைபெற உள்ள Michelin Le Mans Cup போட்டியில் அஜித் குமார் பங்கேற்கிறார். விஜய்யின் லண்டன் பயணமும் இதே காலகட்டத்தில் அமைந்துள்ளதால், அவர் அஜித்தின் ரேஸை நேரில் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் 2026 Michelin Le Mans Cup போட்டியின் அடுத்த சுற்று, இங்கிலாந்தில் உள்ள Silverstone Circuit-ல் செப்டம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
LMP3 பிரிவில் Ajith RedAnt Racing அணிக்காக அஜித் குமார் களமிறங்குகிறார். முன்னாள் F1 வீரர் நரேன் கார்த்திகேயனும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதனிடையே, தமிழக முதல்வர் விஜய் லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பயணமும் அஜித்தின் Silverstone பந்தயமும் ஒரே காலகட்டத்தில் அமைந்துள்ளது.
இதனால் விஜய் Silverstone சென்று அஜித்தின் கார் ரேஸை நேரில் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அஜித்தின் ரேஸை விஜய் நேரில் பார்வையிடுவாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.
எனினும், விஜய் போட்டியை நேரில் பார்வையிடுவார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
Dharshini