வரலாறு காணாத சரிவு.. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 96.14 ஆக வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 96.14 ஆக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக அரசியல் பதற்றம் காரணமாக ரூபாய் தொடர்ந்து வீழ்ச்சி சந்தித்து வருகிறது.

வரலாறு காணாத சரிவு.. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 96.14 ஆக வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) வர்த்தக நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.96 வரை சரிந்தது. பின்னர் வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 95.86 ஆக நிலைபெற்றது.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 95.86 ஆக இருந்த ரூபாய், வர்த்தக நேரத்தில் 96.14 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச நிலையை எட்டியது.

இதற்கிடையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 109.20 டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும், உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தும் வருவதால் இந்திய ரூபாயின் மீது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.