ஒரே மரத்தில் 14 வகை மாம்பழங்கள்.. குஜராத் விவசாயியின் அசத்தல் சாதனை!

குஜராத் விவசாயி உகாபாய் பட்டி 25 ஆண்டுகள் உழைத்து ஒரே மரத்தில் 14 வகையான மாம்பழங்களை வளர்த்து சாதனை படைத்துள்ளார்.

ஒரே மரத்தில் 14 வகை மாம்பழங்கள்.. குஜராத் விவசாயியின் அசத்தல் சாதனை!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி உகாபாய் பட்டி, ஒரே மரத்தில் 14 வகையான மாம்பழங்களை வளர்த்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

‘மாங்கோ மிராக்கிள்’ என அழைக்கப்படும் இந்த சாதனை, 25 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட கடின உழைப்பின் பலனாக உருவாகியுள்ளது. மரக்கிளை ஒட்டும் (Grafting) முறையை பயன்படுத்தி, பல்வேறு வகை மாம்பழ மரங்களின் கிளைகளை ஒரே மரத்தில் இணைத்து வளர்த்துள்ளார்.

இதன் மூலம், ஒரே மரத்தில் வெவ்வேறு சுவை, நிறம் மற்றும் வடிவம் கொண்ட 14 வகையான மாம்பழங்கள் காய்க்கும் அபூர்வ சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

விவசாயத்தில் புதுமை மற்றும் பொறுமையின் சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படும் இந்த மரம், தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.