உலக சாதனை படைத்த கோவை மாணவன் டைட்டஸ்.. ஜூனியர் மிஸ்டர் கிட்ஸ் பட்டத்தில் தங்கம்!

இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற Junior Mister Kids of the World 2026 போட்டியில் கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மாணவன் டைட்டஸ் தங்கப் பட்டம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

உலக சாதனை படைத்த கோவை மாணவன் டைட்டஸ்.. ஜூனியர் மிஸ்டர் கிட்ஸ் பட்டத்தில் தங்கம்!

இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற “Junior Mister Kids of the World 2026” போட்டியில் கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த 8 வயது மாணவன் டைட்டஸ் தங்கப் பட்டம் வென்று உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்றனர். இதில் திறமைகள் சுற்றில் டைட்டஸ் வெளிப்படுத்திய சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடுவர்களை பெரிதும் கவர்ந்தது.

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பாட்டத்தை உலக மேடையில் அழகாக வெளிப்படுத்திய டைட்டஸ், தனது அபார திறமையால் தங்கப் பட்டத்தை கைப்பற்றினார்.

சிறிய வயதிலேயே உலக அரங்கில் தமிழ் கலாசாரத்தை எடுத்துக்காட்டிய கோவை மாணவனின் சாதனை சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் டைட்டஸின் இந்த உலகளாவிய வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.