அக். 6-ல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு பொது விடுமுறை!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுவதையடுத்து, அந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் இந்த இரு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாளில் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைச் செலுத்துவதற்கு வசதியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளில் பணிபுரிந்தாலும், மதுராந்தகம் அல்லது தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள ஊழியர்களுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Dharshini