கோவையில் ரூ.400 கோடியில் ஃபின்டெக் ஹப்! – முதல்வர் விஜய் அறிவிப்பு
கோயம்புத்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையமான ஃபின்டெக் ஹப் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையமான ஃபின்டெக் ஹப் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்பத் துறைகளை ஒருங்கிணைத்து, கோவையின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்த ஃபின்டெக் ஹப் அமைக்கப்பட உள்ளது.
நிதி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், புதுமையான தொழில்நுட்ப முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் நிதிச் சேவைகளின் வளர்ச்சிக்கு இந்த மையம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், கோயம்புத்தூர் நிதி தொழில்நுட்பத் துறையில் மேலும் முக்கியமான மையமாக உருவெடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என பார்க்கப்படுகிறது. மேலும், தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dharshini