தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி.. தமிழ்நாட்டில் சவரனுக்கு ₹800 உயர்ந்த தங்கம்!

தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,800-க்கும், வெள்ளி கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி.. தமிழ்நாட்டில் சவரனுக்கு ₹800 உயர்ந்த தங்கம்!

தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய விலைப்படி, தமிழ்நாட்டில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,600-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.