கோவைக்கு பெருமை.. உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனாவை பரிந்துரைத்த கொலீஜியம்!
கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரை சட்டத் துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்ட வல்லுநர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோகனா, 1988ஆம் ஆண்டு கோவை சட்டக் கல்லூரியில் இந்தியாவின் முதல் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு (Five-Year Law Course) பிரிவில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டத் துறையில் பல தசாப்தங்களாக அனுபவம் கொண்ட அவர், நாட்டின் முன்னணி சட்ட நிபுணர்களுடன் இணைந்து பல்வேறு முக்கிய வழக்குகளில் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக, மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், கே.கே. வேணுகோபால், ப. சிதம்பரம், அருண் ஜெட்லி மற்றும் டி. அந்தியருஜினா உள்ளிட்டோருடன் இணைந்து பல முக்கிய சட்ட விவகாரங்களில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அவரது நீண்டகால சட்ட அனுபவம், திறமை மற்றும் நீதித்துறைக்கான பங்களிப்பை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்காக கொலீஜியம் அவரது பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலீஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னர், மோகனா உச்சநீதிமன்ற நீதிபதியாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்.
கோவையைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் உயரிய நீதித்துறையான உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கும், குறிப்பாக கோவை மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
Prasanth Subramani