தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2% தேர்ச்சி – மாணவிகள் மீண்டும் சாதனை
2026 தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்த தேர்ச்சி விகிதம் 95.2% ஆக பதிவாகியுள்ளது. மாணவிகள் 97% தேர்ச்சியுடன் முன்னிலை பெற்றுள்ளனர்.
Trusted News • Politics • Business • Tamil Nadu • World Updates
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தேர்வு மையங்களில் மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்.
பொதுவாக தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு புதிய அரசு இன்னும் பொறுப்பேற்காத காரணத்தால், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பி. சந்திரமோகன் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்வில் மொத்தமாக 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மொத்த தேர்ச்சி விகிதம் 95.2% ஆக பதிவாகியுள்ளது.
பாலின அடிப்படையிலான தேர்ச்சி விவரங்கள் பின்வருமாறு:
வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி வகை அடிப்படையில் தேர்ச்சி விகிதம்:
பள்ளி பிரிவுகளின் அடிப்படையில்:
மாவட்ட வாரியாக, ஈரோடு மாவட்டம் 98.87% தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் 98.05% மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் 97.63% தேர்ச்சி விகிதத்துடன் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்:
மாணவர்கள் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவெண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட்ட கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் முறையாக, ‘வாட்ஸ் ஆப்’ மூலம் தேர்வு முடிவுகளை அறியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 78452 52525 என்ற எண்ணை கைப்பேசியில் சேமித்து, “hi” என அனுப்பி தொடர்ந்து வரும் வழிமுறைகளை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிமுகப்படுத்திய இந்த புதிய வசதி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Prasanth Subramani May 30, 2026 0 2
கோவையில் மூடப்பட்டுள்ள VOC பூங்கா உயிரியல் பூங்கா, நவீன விளையாட்டு மையமாக மாற்றப்படுகிறது....
Prasanth Subramani May 30, 2026 0 3
கோவையில் மே 31 அன்று ஆர்எஸ் புரம் டிபி சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது....
Prasanth Subramani Jun 1, 2026 0 2
தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு ஜூன் 1 அன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
Prasanth Subramani May 25, 2026 0 3
IPL 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி...
Prasanth Subramani Jun 8, 2026 0 1
பிலிப்பின்ஸின் மின்டானோ பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள்...
Dhiyanesh May 4, 2026 0 9
அக்ஷயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா 26, விளையாட்டு விழா மற்றும்...
Prasanth Subramani May 28, 2026 0 2
IPL 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 47 ரன்கள் வித்தியாசத்தில்...
Prasanth Subramani Jun 8, 2026 0 1
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு...
Prasanth Subramani Jun 5, 2026 0 3
கேரளாவின் மீனச்சில் ஆற்றின் மீது உள்ள பாலத்தில் ஏற்பட்ட ஒரு தற்செயலான சந்திப்பு,...
Prasanth Subramani May 30, 2026 0 5
IPL 2026 குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய...