மார்ஷ் மிரட்டல்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ!
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 38 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இளம் வீரர் கார்த்திக் சர்மா பொறுப்புடன் விளையாடி 71 ரன்கள் சேர்த்து அணியை மீட்டார்.
அவரது சிறப்பான இன்னிங்ஸ் மூலம் சென்னை போட்டித்திறன் மிக்க இலக்கை நிர்ணயித்தாலும், பந்துவீச்சில் அந்த அணி ஏமாற்றமளித்தது.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 38 பந்துகளில் 90 ரன்கள் விளாசிய அவர், சென்னை பந்துவீச்சாளர்களை சிதறடித்தார்.
நடுத்தர ஓவர்களில் நிக்கோலஸ் பூரனும் வேகமான ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை எளிதாக்கினார். இறுதியில் லக்னோ அணி 7 விக்கெட்டுகள் மீதமிருக்க வெற்றியை பதிவு செய்தது.
சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் முழுப் போட்டியிலும் தடுமாறினர். குறிப்பாக அன்ஷுல் கம்போஜ் பவர்பிளே மற்றும் இறுதி ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மேலும் சிக்கலான நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், போட்டி தொடங்குவதற்கு முன் இரு அணி வீரர்களும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி கருப்பு பட்டை அணிந்து களமிறங்கினர்.
பிளேஆஃப் வாய்ப்பை இழந்திருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இந்த வெற்றியின் மூலம் ரசிகர்களுக்கு ஆறுதல் வெற்றியை வழங்கியுள்ளது.
Prasanth Subramani