தமிழ்நாட்டில் இன்று தென்மேற்குப் பருவமழை தொடக்கம்?.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று தென்மேற்குப் பருவமழை தொடக்கம்?.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் கடுமையாக இருந்த நிலையில், தற்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்பாகவே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

அதன்படி, தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் - நிகோபார் தீவுகளில் அடுத்த சில மணி நேரங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் மூலம், இந்தாண்டு தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட சுமார் 6 நாட்களுக்கு முன்பாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (மே 16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.