அனிருத் ரவிச்சந்தர் கோவை 'ஹாப்பி எண்டிங் ஐஸ்கிரீம்ஸ்' நிறுவனத்தில் முதலீடு... பிராண்ட் தூதராகவும் இணைந்தார்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், கோவையைச் சேர்ந்த ஹாப்பி எண்டிங் ஐஸ்கிரீம்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் தூதராகவும் முதலீட்டாளராகவும் இணைந்துள்ளார். ஸ்டார்ட்அப் சிங்கம் நிகழ்ச்சியில் நிறுவனத்தின் வளர்ச்சி பார்வையால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் கோவை 'ஹாப்பி எண்டிங் ஐஸ்கிரீம்ஸ்' நிறுவனத்தில் முதலீடு... பிராண்ட் தூதராகவும் இணைந்தார்!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், கோவையைச் சேர்ந்த 'Happy Ending Ice Creams' நிறுவனத்தின் பிராண்ட் தூதராகவும் முதலீட்டாளராகவும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு கோவை ஸ்டார்ட்அப் உலகில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'Startup Singam' நிகழ்ச்சியின் மூலம் இந்த நிறுவனத்தை அறிந்த அனிருத், அதன் புதுமையான வணிக முறை, தரமான தயாரிப்புகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி நோக்கால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தில் முதலீடு செய்வதுடன், அதன் பிராண்ட் தூதராகவும் இணைந்து நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுக்க முடிவு செய்துள்ளார்.

இந்த ஒத்துழைப்பு மூலம் 'Happy Ending Ice Creams' நிறுவனம் தனது பிராண்ட் மதிப்பை மேலும் உயர்த்தி, தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளது. அனிருத்தின் இணைவு, இளம் தொழில்முனைவோருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.