மாணவர்களை தலைவர்களாக மாற்றிய RYLA நிகழ்ச்சி.. ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் ரோட்டரி அசத்தல்!
கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற RYLA தலைமைத்துவ பயிற்சி முகாமில் 200 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நர்சிங் கல்லூரியில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சிட்டி மற்றும் ராயல் கேர் நர்சிங் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இணைந்து “RYLA – Rotary Youth Leadership Awards” என்ற ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சியை மே 22, 2026 அன்று நடத்தியது. “YOUTH FOR CHANGE, LEADERS FOR SOCIETY” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் மனநல நிபுணருமான டாக்டர் பரந்தாமன் சேதுபதி தொடங்கி வைத்தார். இதில் ராயல் கேர் நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.கவிதா மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சிட்டியின் தலைவர் ரோட்டேரியன் டாக்டர் ஜி.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து “Behavioural Communication” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வை IIVM கல்லூரி ஆஃப் ஆப்டோமெட்ரியின் இயக்குநர் திருமதி பமேலா சுரேஷ் மற்றும் INLIFE Foundation அறங்காவலர் திரு சுரேஷ் குன்னத் ஆகியோர் நடத்தினர். தொடர்பு கொள்ளும் போது அகங்காரம் எவ்வாறு வெளிப்படுகிறது மற்றும் தகவல் பரிமாற்றத்தில் தெளிவு எவ்வாறு குறைகிறது என்பதைக் குறித்து அவர்கள் செயல்முறை விளக்கங்களுடன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
அடுத்து நடைபெற்ற “Lead your Time and Change” அமர்வை RI District 3206 உறுப்பினர் சேர்க்கை குழு இணைத் தலைவர் ரோட்டேரியன் ரத்னவேல் பொன் நடத்தினார். தலைமைத்துவம் என்பது ஒரு மனப்பாங்கு என்றும், நேர மேலாண்மை மற்றும் குழு ஒருங்கிணைப்பு ஒரு தலைவரின் முக்கிய வளங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக “Unleash the Leader in You” என்ற அமர்வை RI District 3206 மாவட்ட பயிற்சியாளர் நியமனராக உள்ள ரோட்டராக்டர் சரண் நடத்தினார். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தலைவர் இருப்பதாகவும், அதை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர் மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். LALETTA என்ற சுருக்க முறையின் மூலம் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தும் வழிகளை எடுத்துரைத்தார்.
நிறைவு விழாவில் RI District 3206 மாவட்ட இயக்குநர் ரோட்டேரியன் கே.கே. சக், RYLA மாவட்ட தலைவர் ரோட்டேரியன் என்.ராஜசேகர் மற்றும் Rotaract மாவட்ட தலைவர் ரோட்டேரியன் பிரெட்ரிக் ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறந்த பங்கேற்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராயல் கேர் நர்சிங் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் தலைவர் பாத்திமா தஸ்னீம், ரோட்டராக்டர் இடா பிளெசிடெல் மற்றும் பேராசிரியர் ஜிஜினா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர்களும் பலரும் கலந்து கொண்டனர்.
RYLA நிகழ்ச்சியில் பெற்ற அனுபவம் தங்களை சிறந்த தலைவர்களாக மாற்றும் என்று மாணவர்கள் உறுதியளித்தனர்.
Prasanth Subramani