உயர்க்கல்வி மாணவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வரவு.. தமிழக அரசு நடவடிக்கை
உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1,000 ஊக்கத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வியாழக்கிழமை வரவு வைக்கப்பட்டது.
உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வரும் ரூ.1,000 ஊக்கத்தொகை, பயனாளிகள் அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் வியாழக்கிழமை காலை வரவு வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த மாதத்திற்கான ஊக்கத்தொகை தொகை இன்று காலை முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்விச் செலவுகளை சமாளிக்க இந்த உதவித்தொகை பயனுள்ளதாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Prasanth Subramani