சுயதொழில் தொடங்க விரும்புகிறீர்களா? TNAU வழங்கும் ஒருநாள் காலான் வளர்ப்பு பயிற்சி!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஜூன் 5, 2026 அன்று ஒருநாள் காலான் வளர்ப்பு பயிற்சியை நடத்துகிறது. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் இதில் பங்கேற்று சான்றிதழ் பெறலாம்.
சுயதொழில் தொடங்க விரும்பும் விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, ஜூன் 5, 2026 அன்று ஒருநாள் காலான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. காலான் உற்பத்தி மற்றும் விற்பனை மூலம் வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பயிற்சியில் காலான் வளர்ப்பதற்கான நவீன தொழில்நுட்பங்கள், முதலீட்டு திட்டமிடல், பராமரிப்பு முறைகள், சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், பயிற்சி நடைபெறும் நாளிலேயே நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நிறைவடைந்த பின்னர், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் வங்கிக் கடன் பெறுவதற்கும், அரசு மானியத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும் உதவிகரமாக இருக்கும்.
பயிற்சிக் கட்டணம்
- பொதுப் பங்கேற்பாளர்கள்: ரூ.850
- மாணவர்கள்: ரூ.590
வேளாண்மை சார்ந்த சுயதொழிலில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த பயிற்சி ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Prasanth Subramani