10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 94.31% மாணவர்கள் தேர்ச்சி!
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த ஆண்டில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த ஆண்டுக்கான தேர்வில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8.82 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.
மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு, பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகின்றன. தனித்தேர்வர்களுக்கும் இணையவழி விண்ணப்பத்தில் வழங்கிய கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் SMS மூலம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Prasanth Subramani