டெல்லியில் போராட்டம் வாபஸ்! உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு CJP முடிவு

நீட் முறைகேடு போராட்டங்கள் தொடர்பான FIR-களை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, டெல்லியில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற இருந்த பேரணியை CJP வாபஸ் பெற்றுள்ளது.

டெல்லியில் போராட்டம் வாபஸ்! உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு CJP முடிவு

டெல்லியில் செப்.5 போராட்டம் வாபஸ்! உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு CJP முடிவு

நீட் முறைகேடு தொடர்பான போராட்டங்களில் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற இருந்த பேரணியை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடுகளை கண்டித்து CJP போராட்டம் நடத்தியது. போராட்டத்தின் போது மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு உறுதி அளித்திருந்த நிலையில், அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தியா கேட் முதல் டெல்லி காவல்துறை தலைமையகம் வரை பேரணி நடத்த CJP அறிவித்திருந்தது.

இதற்கிடையில், மாணவர் போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட FIR-களை ரத்து செய்ய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி வழக்குகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம், ஜூலை 20 முதல் 25 வரையிலான போராட்டங்கள் தொடர்பாக இனி புதிய FIR பதிவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, மத்திய அரசின் உறுதிமொழி மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கருத்தில் கொண்டு செப்டம்பர் 5 பேரணியை திரும்பப் பெறுவதாக CJP செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால், செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருந்த CJP-யின் போராட்டப் பேரணி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.