சீனாவில் பயங்கர நிலச்சரிவு: ஆற்றின் நீரோட்டம் தடை; 161 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவால் மின் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டது. நிலச்சரிவு அபாயம் முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் 161 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

சீனாவில் பயங்கர நிலச்சரிவு: ஆற்றின் நீரோட்டம் தடை; 161 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில் ஏராளமான மண் மற்றும் பாறைகள் மின் ஆற்றில் கொட்டியதால், அந்தப் பகுதியில் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டது.

மேலும், நிலச்சரிவு காரணமாக அருகிலிருந்த தேசிய நெடுஞ்சாலை 213-லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் முன்கூட்டியே கண்டறியப்பட்டிருந்ததால், ஆபத்தான பகுதியில் வசித்து வந்த 161 பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இதனால் இந்தப் பெரும் நிலச்சரிவில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து சாலைப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், நிலைமையை கண்காணிக்கும் பணிகளுடன் அவசர மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.