அஜித் குமார் பாராட்டு: சென்னையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்புக்கு வரவேற்பு

சென்னையில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரருமான அஜித் குமார் வரவேற்றுள்ளார். இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸுக்கு இது மிகப்பெரிய முன்னேற்றமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் பாராட்டு: சென்னையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்புக்கு வரவேற்பு

தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சென்னையில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரருமான அஜித் குமார் வரவேற்றுள்ளார். விளையாட்டு மற்றும் மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறைகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் வெளியிட்ட அறிக்கையில், மோட்டார்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பில் அரசு கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழ்நாடு அரசின் ஒரு சிறிய முன்னேற்றம், இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸுக்கு ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜயின் அனைத்து முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துகளையும் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்பின்படி, புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் சர்வதேச தரத்திலான பந்தயத் தடம், நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

மேலும், ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 உள்ளிட்ட சர்வதேச தரத்திலான போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞர்களிடம் உள்ள மோட்டார்ஸ்போர்ட்ஸ் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனுடன், விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், மோட்டார்ஸ்போர்ட்ஸ் சார்ந்த தொழில்துறையின் வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு அஜித் குமார் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.