சீன நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து.. 85 பேருக்கு மேல் உயிரிழப்பு!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் 85-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

சீன நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து.. 85 பேருக்கு மேல் உயிரிழப்பு!

சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 85-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள கின்யுவான் மாவட்ட நிலக்கரி சுரங்கத்தில் திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட வெடிவிபத்தில் சுரங்கத்தின் உள்ளே பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

விபத்து நடந்த நேரத்தில் சுரங்கத்திற்குள் சுமார் 240-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 85-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துக்குப் பிறகு உடனடியாக மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பலர் உயிருடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சுரங்கத்தின் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் சீனாவின் சுரங்க பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.