“உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக..” – LinkedIn-ல் வேலைக்கு ஆள் தேடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு LinkedIn மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு LinkedIn மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் Level 2 கிரிக்கெட் பயிற்சியாளர் தகுதியும், 5 ஆண்டுகள் பயிற்சி அனுபவமும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது LinkedIn பக்கத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, Senior Manager – Security & Anti-Corruption பதவிக்கான அறிவிப்பும் தற்போது இடம்பெற்றுள்ளது.
இந்தப் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன், பாகிஸ்தான் ராணுவம், பஞ்சாப் காவல்துறை அல்லது சிந்து காவல்துறையில் குறைந்தது 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் கோரப்பட்டுள்ளது.
இருப்பினும், தேசிய கிரிக்கெட் அணிக்கான பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கே LinkedIn மூலம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
Dharshini