கோவையில் புதிய Go-Karting அரங்கம்... ஜூலை 18 முதல் பொதுமக்களுக்கு திறப்பு!
கோவையில் கீரணத்தம் அருகே வரதையனூர் பாளையத்தில் Apex Karting Arena ஜூலை 18 முதல் திறக்கப்படுகிறது. 550 மீட்டர் வெளிப்புற Go-Karting டிராக், கஃபே, பிக்கிள்பால் மைதானம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
கோவையில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களுக்கு புதிய மகிழ்ச்சியான செய்தியாக, புதிய Go-Karting மையமான Apex Karting Arena ஜூலை 18 முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்குகிறது.
கீரணத்தம் அருகே உள்ள வரதையனூர் பாளையத்தில் அமைந்துள்ள இந்த நவீன வளாகத்தில், அதிவேக இரு-ஸ்ட்ரோக் Go-Karts-க்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 550 மீட்டர் நீளமுள்ள வெளிப்புற Go-Karting டிராக் அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தை விரும்பும் இளைஞர்கள் மற்றும் மோட்டார்ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு இது புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்தய அனுபவத்துடன் மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்காக கஃபே, Pickleball மைதானம் மற்றும் Rooftop Viewing Deck போன்ற வசதிகளும் இந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், நண்பர்களுடன் பொழுதுபோக்கை அனுபவிக்கவும் ஏற்ற முழுமையான பொழுதுபோக்கு மையமாக Apex Karting Arena உருவாகியுள்ளது.
கோவையில் சாகச விளையாட்டு மற்றும் மோட்டார்ஸ்போர்ட்ஸ் வசதிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், Apex Karting Arena நகரின் புதிய அடையாளங்களில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Prasanth Subramani