“பார்ட்டி ஃபண்ட்” ஊழல் குற்றச்சாட்டு – சட்டப்பேரவையில் திமுகவை கடுமையாக விமர்சித்த முதல்வர் விஜய்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், முந்தைய திமுக ஆட்சிக்கால ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக முதல்வர் விஜய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “பார்ட்டி ஃபண்ட்” மற்றும் TASMAC முறைகேடுகள் குறித்தும் அவர் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அமலாக்கத்துறை (ED) ஆவணங்களை மேற்கோள் காட்டிய விஜய், அரசு ஒப்பந்தங்களில் 7.5% முதல் 10% வரை “பார்ட்டி ஃபண்ட்” என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பயனாளிகளாக ED ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மேலும், TASMAC தொடர்பான முறைகேடுகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோர் தொடர்பாகவும் விஜய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டம்-ஒழுங்கு குறித்து பேசிய முதல்வர் விஜய், காவல்துறை “நல்லவர்களுக்கு நண்பனாகவும், கெட்டவர்களுக்கு எதிரியாகவும்” செயல்பட வேண்டும் என்றும், குற்றம் செய்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Dharshini