BEL நிறுவனத்தில் Senior Assistant Engineer வேலைவாய்ப்பு... ரூ.1.20 லட்சம் வரை சம்பளம்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் Senior Assistant Engineer பணிக்கு 17 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 8, 2026.

BEL நிறுவனத்தில் Senior Assistant Engineer வேலைவாய்ப்பு... ரூ.1.20 லட்சம் வரை சம்பளம்!

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), சென்னை அலுவலகத்தில் Senior Assistant Engineer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 17 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், தகுதியும் அனுபவமும் கொண்ட முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 4788/002/REC/HR & A/CHN/2026.

**காலியிடங்கள்:**
• Electronics – 10  
• Mechanical – 5  
• Electrical – 2

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் Electronics, Mechanical அல்லது Electrical உள்ளிட்ட தொடர்புடைய துறைகளில் BE / B.Tech அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் இந்திய ராணுவம், கடற்படை அல்லது விமானப்படையில் குறைந்தது 15 ஆண்டுகள் Junior Commissioned Officer (JCO) பதவியில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் வயது 01.06.2026 தேதியின்படி 50 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும்.

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பப் படிவத்தை BEL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

**AGM (HR & Administration),  
Bharat Electronics Limited,  
BEL – Army School Road,  
Nandambakkam,  
Chennai – 600089.**

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி **08.07.2026** ஆகும். அரசு பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் தகுதியான முன்னாள் ராணுவத்தினருக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.